வழமைக்கு திரும்பிய அனலைதீவு, காரைநகர்!

 அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் 

நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டு நபர்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்பது சுகாதாரப்பிரிவினரால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எனவே அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது”என்று மாவட்ட செயலாளர் க. மகேசன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.Blogger இயக்குவது.