வவுனியாவில் துனிகர திருட்டு சம்பவம்!

வவுனியாயாவில் நேற்று கடையொன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்ட  முச்சக்கர வண்டியில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா ஹொறவப்பொத்தானை வீதிபள்ளி வாசல் சந்திக்கு முன்பாக  நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியின் உதிரி பாகங்களே  நேற்று (10) மாலை இனம் தெரியாத நபர்களால் திருடப்பட்டுள்ளது.

நேற்று மாலை வவுனியா ஹொறவப்பொத்தானை வீதி பள்ளி வாசல் சந்திக்கு முன்பாக உள்ள கடையொன்றின் முன்னால்  தனது  முச்சக்கரவண்டியினை நிறுத்திவிட்டு பொருட்களை  கொள்வனவு செய்ய முச்சக்கரவண்டி உரிமையாளர் சென்றுள்ளார். 

நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிக்கு அருகாமையில் இரு இளைஞர்கள் நின்றுள்ளனர். அதனை அவதானித்த வாகன உரிமையாளர் அவசர அவசரமாக  கடைக்குள் நுளைந்து பொருட்களை கொள்வனவு செய்துவிட்டு வந்து பார்த்தபோது  சுமார்  20,000 பெறுமதியான முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்ட  பாடல் பெட்டி (box set) காணவில்லை.

அதனைத்  தொடர்ந்து அவர் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரிடம்   முறைப்பாடு செய்ததனை தொடர்ந்து  அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதியில் இருந்த  அவதானிப்புகருவி (cctv)மூலம் அவதானித்து திருடிய சந்தேகநபர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.