மூடப்பட்டது வவுனியா பிரதான வீதி வெளியானது காரணம்?
வவுனியா ஹொரவபொத்தானை பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கு செல்லும் பிரதான வீதியான ஹொரவபொத்தானை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளமையினால் மாற்றுப்பாதையூடாக பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை பாரவூர்தியொன்று வீதியின் ஒரத்தில் இருந்த அதிஉயர் மின்கம்பத்துடன் மோதுண்டுள்ளது.
இதன் காரணமாக உயர் மின்அழுத்த விநியோகம் வழங்கப்படும் குறித்த மின்கம்பம் கடும் சேதத்திற்குள்ளானது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் உடனடியாக மின்சாரத்தினை துண்டித்ததுடன் போக்குவரத்துப் பொலிஸாரின் உதவியுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தினையும் துண்டித்தனர்.
இதனையடுத்து சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன், திருத்த வேலைகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை