வவுனியா விபத்தில் இருவர் காயம்!

 வவுனியா மன்னார் வீதியில் இன்று(11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து குருமன்காடு பகுதி நோக்கி சென்ற முச்சக்கர வண்டி காமினி பாடசாலைக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த போது திடீரென மறுபக்கம் சென்று திரும்ப முற்பட்ட போது மன்னார் வீதி வழியாக நகர் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன்  நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதி ஆகிய இருவரும் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.