அசர்பைஜான் மீது ஆர்மீனியா ஷெல் தாக்குதல்!

 அசர்பைஜானின் காஞ்சா நகரில் ஆர்மீனிய படைகள் ஷெல் தாக்குதல்களை நடத்தயுள்ளனர்.

இதன் விளைவாக ஐந்து பேர் உயிரிழந்ததுடன் 28 பேர்

காயமடைந்ததாகவும் அசெரி பிரதி வழக்குத்தொடுநர் நாயக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான காஞ்சாவை ஆர்மீனியப் படைகள் தாக்கியதாக அசெரி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

பல பெரிய கிராமங்கள் அசெரி படைகளால் தாக்கப்பட்டதாக நாகோர்னோ-கராபெக் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 9-10 ஆம் திகதிகளில் 10 மணிநேரத்திற்கு மேலாக இரு நாடுகளுக்கிடையேயான யுத்த நிறுத்தம் தொடர்பில் மொஸ்கோவில் அமைதிப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது.

ரஷ்யா, ஆர்மீனியா மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்கள் நாகோர்னோ-கராபெக் பிராந்தியத்தில் ஏற்பட்ட பகைமைகளை முடிவுக்கு கொண்டுவர இதன்போது தீர்மானித்தனர்.

பேச்சுவார்த்தைகளின் விளைவாக அக்டோபர் 10 முதல் மோதலின் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ளவும் முடிவு எட்டப்பட்டது.

இந் நிலையிலேயே இரு நாடுகளுக்கிடையிலான மோதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.