வவுனியாவில் காணாமல்போன நபர் கண்டுபிடிக்கப்பட்டார்!

 புதுக்குடியிருப்பில் இருந்து வவுனியா சென்ற நிலையில் காணாமல்போனதாக கூறப்படும் நபர் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியைச் சேர்ந்த மனுவேப்பிள்ளை மன்னா (ஐயாச்சி) என்ற (35 வயது) நபரே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா நோக்கி சென்ற பேருந்தில் ஏறி பயணித்து, மாலை 4.30 மணியளவில் வவுனியா, தபாலகம் முன்பாக இறங்கியுள்ளார்.

அதன் பின்குறித்த அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை என பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததுடன், வவுனியா பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து மன்னார் பகுதியில் குறித்த நபர் நின்றதை அவதானித்தவர்கள் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரின் உறவினர்கள் மன்னாரிற்கு சென்று அந்த நபரை மீட்டுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக இடம்தெரியாது குறித்த நபர் மன்னார் சென்றுள்ளதாக தெரியவரும் அதேவேளை புதுக்குடியிருப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.