பல்கலைக்கழக பரீட்சைகள் குறித்து வெளியாகியுள்ள விடயம்!

 


பல்கலைக்கழக பரீட்சைகள் இணைய வழியில் (ஒன்லைன்) நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் மத்தியில் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல் மேற்கொண்டு கற்கைநெறிகளின் தரத்தை பாதுகாக்கும் வகையில் இந்நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் எதுவித பாதிப்புகளும் இடம்பெறக்கூடாதென்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Blogger இயக்குவது.