ரஜினியின் அரசியல் முடிவுக்கு திடீர் ஆதரவு அளித்த சீமான்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து அவரது அரசியல் வருகைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருபவர்களில் ஒருவர் நடிகரும் இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 3 ஆண்டுகளாக ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் திடீரென தற்போது ரஜினி மீதான முரண்பாடு நீங்கியது என்று குறிப்பிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி ஒரு தமிழர் அல்ல என்றும் அவர் முதல்வராக கூடாது என்பது தான் தன்னுடைய எதிர்ப்புக்கு காரணம் என்றும் ஆனால் அவர் வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என கூறியதில் இருந்தே அவர் மீதான முரண்பாடு நீங்கி விட்டது என்றும் சீமான் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஏற்கனவே பல மேடைகளில் மற்ற மாநிலத்திலவர்கள் இங்கு வாழ்வதற்கும், தொழில் செய்வதற்கும் தடையில்லை என்றும் ஆனால் ஆட்சியை தமிழர் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் சீமான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடனான முரண்பாடு நீங்கிவிட்டதாக சீமான் கூறியதில் இருந்து இனி அவர் ரஜினியை விமர்சனம் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை