மஸ்கெலியாவில் ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

 மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டீசைட் தோட்ட மேல் பிரிவில் இன்று 9ஆம் திகதியன்று காலை 7:45 மணியளவில் 1 ½ வயது குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இச்சம்பவத்தில் 1 ½ வயதுடைய விட்டின் பிரசாத் என்ற குழந்தையே இவ்வாறு கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டதுடன் காலை வேளையில் குழந்தையை காணவில்லை என தேடிய போது கிணற்றில் விழுந்து இருப்பதை கண்டு காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் குழந்தை இறந்துவிட்டதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன் அக்குழந்தையின் பிரேத பரிசோதனையை திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.