கட்டுப்பாட்டு விலையால் தேங்காய்க்கு ஏற்பட்ட நிலை!

 தேங்காய்க்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.


எனினும் சில இடங்களில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு தொடர்ந்தும் தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.


 

அண்மையில் தேங்காய்களின் சுற்றளவுக்கு அமைய விலை நிர்ணயிக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.


இதற்கமைய, 13 அங்குலங்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை 70 ரூபாவாகும்.


12 முதல் 13 அங்குல சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 65 ரூபாவாகும்.


12 அங்குலத்தை விடவும் குறைந்த சுற்றளவு கொண்ட தேங்காய் ஒன்றின் விலை 60 ரூபாவாகவும் நிரணயம் செய்யப்பட்டுள்ளது.


எனினும் குறித்த விலைகளுக்கு தேங்காய்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என நுகர்வோர் குற்றம்சாட்டுக்கின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.