கிளிநொச்சியில் விவசாய கண்காட்சி!
வருடந்தோறும் இடம்பெற்று வருகின்ற விவசாய கண்காட்சி, இம்முறையும் கிளிநொச்சி – வட்டக்கச்சி விவசாய பண்ணையில் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று (01) குறித்த கண்காட்சி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமானது.
இரண்டு நாட்கள் கொண்ட குறித்த கண்காட்சியின் முதல் நாளான நேற்று, விவசாயிகள் மற்றும் மாணவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியில் விவசாய உற்பத்தி சார்ந்த பல்வேறு விடயங்கள் மற்றும் விவசாய நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்கள்,கால்நடை வளர்ப்பு போன்றன காட்சிக்கு வைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகின்றன.
அத்துடன், தன்னிறைவு விவசாய உற்பத்தியில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை