கள்ள மணலுடன் இருவர் கைது!
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து தென்பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, இரண்டு சந்தேக நபர்களையும் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
பாரிய கொள்கலன்களில் மணல் ஏற்றிச் செல்லும் போது விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புணாணை பிரதேசத்தில் வைத்து சோதனையிட்டபோது இவ் சட்டவிரோத நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை