பேருவளை பிரதேசத்தில் சுனாமி பீதி – மக்கள் பாதுகாப்பான இடத்தில தஞ்சம்

 களுத்துறை – பேருவளை பிரதேசத்தில் ஏற்பட்ட சுனாமி அச்சத்தினால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினி தீவில் இன்று முற்பகலில் 6.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

இதனையடுத்து பேருவளை கடற்கரைப் பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக கட்டுக்கதைகள் பரவியதை அடுத்து பல வர்த்தக நிலையங்கள் அங்கு மூடப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

அதேபோல சில வீடுகளிலிருந்தும் மக்கள் பொருட்களை ஏற்றி பாதுகாப்பான இடங்களுக்கும் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் எமது செய்திப் பிரிவு வினவியது.

சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக இதுவரை எந்தவொரு எச்சரிக்கையும், சமிக்ஞையும் இலங்கைக்கு விடுக்கப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.