புலம்பெயர் தமிழர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்னை காப்பாற்றுங்கள்!

 புலம்பெயர் தமிழர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பையும் அரசாங்கம் விலக்கி விட்டது. மட்டக்களப்பிலிலுள்ள சிங்களவர்களிற்காக குரல் கொடுப்பதற்கு யாருமில்லை. நான் மட்டுமே சிங்கள தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கிறேன். கடமையை செய்ய வேண்டிய அரச அதிகாரிகள் அதை செய்யவில்லை. மாறாக என் மீது 80 வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர் என அடுத்த குண்டை போட்டுள்ளார் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி சுமணரத்ன தேரர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“மட்டக்களப்பில் வெடிகுண்டுகள் வெடித்துக் கொண்டிருந்த போது இங்கு வந்தேன். இங்குள்ள சிங்கள மக்களிற்காக மங்களராமய வழிபாட்டுத்தலத்தை உருவாக்கினேன்.

பிரச்சினையால் கடுமையாக துன்பப்பட்ட அப்பாவி சிங்கள மக்களின் பிரச்சினைகளுக்கு விடை காண நான் மட்டக்களப்புக்குச் செல்ல வேண்டியிருந்தது. இந்த மக்களின் பிரச்சினைகளை நான் தீர்க்க முயன்றதால் அதிகாரிகளால் விமர்சிக்கப்பட வேண்டியிருந்தது.

ஏழைகளுக்காக சுமார் நானூறு வீடுகள் கட்டினோம். சிங்களவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சுமார் நூறு ஏக்கர் நிலத்தை மீட்க, பட்டினியால் வாடும் மக்களின் பட்டினியைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆயிரம் தடைகளுக்கு மத்தியில் சுமார் 200 ஏக்கர் நெல் நிலங்களில் பயிரிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கிறார்கள். கால்நடைகள் அவர்களின் பயிர்களை அழித்தபோது பாதிக்கப்பட்டுள்ள சிங்கள மக்கள் சார்பாக பேச யாரும் யாரும் மட்டக்களப்புக்கு வரவில்லை. அதற்கான குரல் நான்தான். நாளுக்கு நாள் தொல்பொருள்கள் புல்டோசரால் அழிக்கப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் விலகிப் போகிறார்கள். நான் அவர்களிடம் பேசும்போது, ​​நான் ஒரு குற்றவாளி என்பதைபோல உலகுக்குக் காட்டி நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். தங்கள் வேலையைச் சரியாகச் செய்யாதவர்கள் அதிலிருந்து தப்பித்துக்கொள்கிறார்கள்.

இப்போது நான் மக்கள் சார்பாக பேசியுள்ளேன். கிட்டத்தட்ட எண்பது வழக்குகள் என் மீது தாக்கல் செய்யப் வந்துள்ளன.

இப்போது எனக்கு தமிழ் புலம்பெயர்ந்தோரிடமிருந்து எனக்கு தொடர்ந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. பலர் தொலைபேசியில் அழைத்து மிரட்டினார்கள். கெவிலியமடு நிலத் தகராறு தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி என்னுடன் நடந்து கொண்டது குறித்து அச்சமடைகிறேன். என்னைக் கொல்ல நடக்கும் சதி குறித்து மங்களகம போலீசில் புகார் அளித்துள்ளேன். அது தொடர்பான ஓடியோ பதிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக எனது பாதுகாப்புக்காக 4 காவல்துறை அதிகாரிகள் வழங்கப்பட்டிருந்தனர். மங்களராமய விகாரை வாயில் அருகே இரண்டு பேர் இருந்தனர்.

இப்போது எனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட நான்கு காவல்துறை அதிகாரிகள் அகற்றப்பட்டுள்ளனர். வாயிலுக்கு அருகில் இரண்டு பேர் மட்டுமே உள்ளனர்.

நான் நகரத்திற்குச் செல்லும்போது, ​​மற்ற விகாரைகளின் வேலைகளைப் பார்க்கச் செல்லும்போது, ​​நான் என் உயிரைப் பணயம் வைக்கிறேன்.

எனது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதால், நான் என் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்கிறேன்“ என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.