மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்றுதி!

 கிரிந்திவெல குட்டிகல பிரதேசத்தில் மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மீன் வியாபாரியுடன் நெருங்கிப் பழகிய சுமார் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொம்பே பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த மீன் வியாபாரி குட்டிகல, ரந்தாவான, மெத்தேகம், போகஹகும்புர, கிரிந்திவெல மற்றும் பெபில்வெல ஆகிய பிரதேசங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மாளிகாவத்தையில் நடாத்தப்பட்ட அரபி பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் அதன் மாணவர்கள் 28 பேர் குறித்த இடத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய அதன் அதிபர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.