வீட்டிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!

 வவுனியா- உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இரவு இவ்வாறு கண்டெடுக்கப்பட்டவர் உக்கிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் சம்பவத்தினத்தன்று, உக்கிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையிலேயே அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் வாயில் இருந்து ஒருவகை நுரை வெளயேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.Blogger இயக்குவது.