கொக்கட்டிச்சோலை விபத்தில் இருவர் பலி!
மட்டக்களப்பு – காெக்கட்டிச்சோலை, மணல்பிட்டி பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியில் தடம்புரண்டதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் இருவர், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) இடம்பெற்ற இந்த விபத்தில் கொக்கட்டிச்சோலை 10ம் பிரிவைச் சேர்ந்த தவக்குமார் டிலஷ்ன் (17-வயது), ஞானசேகரன் கிளிசஷன் (19-வயது) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மணல்பிட்டி சந்தி பகுதியில், வீதியில் வந்த முச்சக்கரவண்டி ஒன்றிற்கு வழிவிட முற்பட்டபோது, உழவு இயந்திரம் வேககட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியதில் இந்த விபத்து இடம்பெற்றது.
கருத்துகள் இல்லை