குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

 


கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடி காரணமாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்தத் தடை தொடரும் என்பதுடன் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக மக்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திடம் இருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அலுவலக நேரங்களில் (மு.ப. 8 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரை) கீழ் காணும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, கடவுச்சீட்டுப் பிரிவுக்கு 070-7101060, 070-7101070 ஆகிய இலக்கங்களிலும், குடியுரிமைப் பிரிவு 070-7101030 ஆகிய தொலைபேசி இலக்கத்திலும், வெளிநாட்டுத் தூதரகப் பிரிவுக்கு 011-5329233, 011-5329235 ஆகிய இலக்கங்களிலும், விசா பிரிவுக்கு 070-7101050 என்ற தொலைபேசி இலக்கத்திலும்  துறைமுகப் பிரிவுக்கு 077-7782505 என்ற இலக்கத்திலும் தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.


அதேபோன்று, dcvisa@immigration.gov.lk , acvisa1@immigration.gov.lk , acvisa2@immigration.gov.lk , acvisa@immigration.gov.lk என்ற மின்னஞ்சல்கள் ஊடாகவும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.