யாழில் சிகிச்சையை பெற்று வீடு திரும்பியவருக்கு மீளவும் கொரோனா!

 வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவ சிகிச்சையை பெற்று வீடு திரும்பியவருக்கு மீளவும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவருக்கு குறைந்தளவான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டுபாயிலிருந்து நாடு திரும்பியவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. சிகிச்சையின் பின்னர் அவர் மீண்டும் கோண்டாவிலில் உள்ள வீட்டிற்கு சென்றிருந்தார்.

பின்னர் ஏற்பட்ட உடல்நல குறைவையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

எனினும், இந்த தகவலை வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மறைக்க முயன்றாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த விடயம் தொடர்பில் தமிழ் பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, அப்படியொருவரும் தொற்றிற்குள்ளாகவில்லையென அவர் மறுத்திருந்தார். எனினும், அது தவறானது.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.