யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பு!

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (08) மாலை இடம்பெற்ற சம்பவங்களின் போது, பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும், அதனை கண்டிக்கும் வகையிலும், தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கலைப்பீட விரிவுரையாளர்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இன்று (09) காலை இடம்பெற்ற விரிவுரையாளர்கள் சந்திப்பொன்றினை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

இதன்படி இன்று நண்பகல் 12 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் செல்லாமல் விரிவுரையாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.