ரோஸி சேனாநாயக்கவுக்கு கொரோனா தொற்று இல்லை

 கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கு  பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை என கொழும்பு மாநகர சபை தலைமை வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி நேற்று தெரிவித்துள்ளார்.

ரோஸி சேனாநாயக்க

இது தொடர்பில் வைத்திய மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரோஸி சேனாநாயக்கவுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக வெளியான தகவலில் எந்த உண்மையும் இல்லை. மேயர் உட்பட கொழும்பு மாநகர சபையின் 140 உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரபையில் ஒரு ஊழியருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே பி.சி.ஆர் பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன.

குறித்த ஊழியர் டீன்ஸ் வீதியிலுள்ள கொழும்பு மாநகர சபை அலுவலகத்தின் பொது உதவி அலுவலகத்தில் பணியாளராக இருந்துள்ளார். புதன்கிழமை மாநகரபையின் நிதிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டதால் மேயர் ரோஸி சேனாநாயக்கவுக்கு பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.