கிளிநொச்சியில் நான்கு குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

 கிளிநொச்சியில் நான்கு குடும்பங்கள்  சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற இரண்டு  சகோதரிகளின் குடும்பமும்,மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள பிரிதொரு ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற யுவதி ஒருவரின் குடும்பமும், புங்குடுதீவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான  யுவதியின் திருமண பேச்சுக்கு சென்று வந்த   இரண்டு குடும்பங்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.


வரும் முன் பாதுகாக்கும் திட்டத்துடன் சுய தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மக்கள் தேவையற்ற வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை. 


அத்தோடு மிக முக்கியமாக பொது மக்கள் தேவையற்ற பயணங்கள் குறிப்பாக வெளி  வட்டங்களுக்கான பயணங்களை தவிர்க்குமாறும் சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.