இணுவிலில் 'ஆவா வினோதன்' வீட்டிற்குள் புகுந்த வாள்வெட்டுக்குழு

 ஆவா குழுவின் தலைவர் என கூறப்படும் “ஆவா வினோதன்” வீட்டுக்குள் புகுந்த வாள்வெட்டு கும்பல் ஒன்று வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கி சேதப்படுத்தியதுடன், வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. 


யாழ்.இணுவில் துரை வீதியில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் மேற்படி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. கடந்த 26ம் திகதி யாழ்.நகரில் பெருமாள் கோவிலுக்கு முன்பாக


மற்றொரு வாள்வெட்டு குழு தலைவர் என கூறப்படும் தனுரொக் என்பவன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஆவா வினோதன் நீதிமன்றில் சரணடைந்து 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றான். 


இந்நிலையிலேயே இன்று மாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.