கொரோனாக்கு பின்னர் இந்தியர்கள் நாட்டுக்கு வரவில்லை - விமல்!



கொவிட் 19 வைரஸ் பரவலின் பின்னர் இந்திய ஊழியர்கள் அல்லது தொழில்நுட்பவியலாளர்களுக்கு இலங்கைக்குவர கைத்தொழில் அமைச்சின் ஊடாக எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அத்துடன் முதலீட்டு சபை மற்றும் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளின் தகவல்களின் பிரகாரமும் எந்தவொரு இந்தியருக்கும் இலங்கைவர அனுமதியளிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். 

பாராளுமன்ற உறுப்பினர் துசார இந்துனில், பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் மூலம்தான் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை நாட்டில் ஏற்பட்டுள்ளதாக அனைவரும் கூறுகின்றனர். 

22 பேர் விமானமொன்றில் மூலம் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்கள் எவ்வித தனிமைப்படுத்தல் சட்டங்களையும் பின்பற்றாது நடந்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு அரசாங்கம்தான் காரணமென்பதை கைத்தொழில் அமைச்சர் ஏற்கிறாரா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசும்போதே அவர் இதனைக் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.