விநாயகர் ஜோதிட நிலையத்தின் உதவித் திட்டங்கள்!வவுனியா குடியிருப்பு விநாயகர் சோதிட நிலையத்தின் 45 ஆம் ஆண்டு நிறைவு தினத்தைமுன்னிட்டு பல்வேறு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா குடியிருப்பு விநாயகர் சோதிட நிலையத்தின் நிறுவுனர் சிவஶ்ரீ மு.க. கந்தசாமிக்குருக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட சில பாடசாலைகளுக்கு விநாயகர் மற்றும் சரஸ்வதி படங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் க. கந்த கணேசதாச குருக்கள், கிறிஸ்தவ, இஸ்லாம் மதகுருமார், சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க உபதலைவர் செ.சபாநாதன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Blogger இயக்குவது.