மஞ்சள் கடத்தியோர் தனிமை சிறையில்!

அனலைதீவு பிரதேசத்தில் நேற்றைய (09) தினம் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிவானின் அனுமதியுடன் குறித்த மூவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்கள் நடமாடியதாக கருதப்படும் பகுதிகளில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு அனலைதீவு பிரதேசம் நேற்று காலையிலிருந்து யாரும் வெளியேறாதவாறும் பிரதேசத்துக்குள் புதிதாக யாரும் உட்பிரவேசிக்காதவாறும் முடக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று நபர்களின் பரிசோதனை முடிவுகள் வரும் வரை குறித்த முடக்கம் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபர்களில் ஒருவர் தப்பி சென்று காரைநகரில் தங்கியிருந்த வீடும் அந்த வீட்டினை சார்ந்தாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.Blogger இயக்குவது.