முருங்கன் பாடசாலை அதிபரின் இடமாற்றத்துக்கு நீதிமன்றம் தடை!

 

மன்னார் – முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியின் இடமாற்றத்திற்கு மன்னார் நீதிவான் நீதிமன்றம் இடைக்கால தடை வித்துள்ளது.

முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபர், வங்காலை பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, இன்று ஆர்ப்பாட்டம் முன்னெக்கப்பட்டது.

குறித்த பாடசாலை அதிபர், தனது கடமையை பொறுப்பேற்று இரண்டு மாதங்களேயான நிலையில், அவரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டமையினால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆரப்பாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பொலிஸார் மன்னார் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேரை கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.