பில்லேடனுக்கு சிலை வைக்க முடியாது; அதுபோல் திலீபனை நினைவேந்த முடியாது – கூறுகிறார் ஊடக அமைச்சர்
“தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாது.”
இவ்வாறு வெகுசன ஊடக அமைச்சர் ஹெஹெலிய ரம்புக்வெல இன்று (02) யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார். மேலும்,
“பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நினைவு கூருவது நிரந்தர சமாதானத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையனால் அத்தகைய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒசாமா பில்லேடன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் கொல்லப்பட்டிருக்கின்றார். அவருக்கு அமெரிக்காவில் சிலை வைக்க முடியாது. அது போலவே பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவராகவே திலீபனும் காணப்படுகின்றார். ஆகையினால் அவருக்கு சிலை வைக்கவோ நினைவு கூரவோ முடியாது.” – என்றார்.
கருத்துகள் இல்லை