இலவசக் கல்விக்கு முரண்!!
தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவி யைப் புலமைப்பரி சில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனு மதி மறுக்கப்பட்ட சம்பவம் இலவச கல்வியை வழங்கும் நாட்டுக்கு முரணானது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;
நிக்கவரெட்டிய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவிக்கு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு குறித்த பாடசாலை அதிபரினால் அனுமதி வழங்கப்படவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். எக் காரணிகளை அடிப்படையாகக்கொண்டு அந்த மாணவி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார் என்பது முதலில் அறியப்பட வேண்டும்.
விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்– – என்றார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை