நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு!
அரச கணக்குகள் குழுவின் (Committee on Public Finance) தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பான வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் நடத்தப்பட்டது.
குறித்த பதவி எதிர்க் கட்சியின் உறுப்பினர் ஒருவருக்குக் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, அரசாங்கத்துக்கு ஆதரவாக 87 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அரச கணக்குகள் குழுவின் தலைவர் பதவி, நிலையியல் கட்டளையின் படி எதிர்க் கட்சிக்கே கிடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியிருந்தது.
எனினும், குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தின் பிரகாரம் தலைவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என ஆளுங்கட்சி தெரிவித்த நிலையில் வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை