54 மாவட்டங்களுக்கு பிரான்ஸில் இரவு நேர ஊரடங்கு!

 


பிரான்ஸில் 54 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.


இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகின்றது. இரவு 9 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கு இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளன.


மருத்துவர்கள், மருத்துவ உதவியாளர்கள், அவசர கால பணியாளர்கள் அனைவருக்கும் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது.


இரவு 9 மணிக்குப் பின்னர் வேலை நிறைவடைவோர்களுக்கு வீடு திரும்புவதற்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதேவேளை, 9 மணிக்கு பின்னர் வேலைக்குச் செல்வோருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளனர்.


முதியோருக்கு உதவுதல், தம் விரும்பத்துக்குரியோருக்கு ‘அவசர நிலை’ எனும் போது வெளியே செல்லலாம். தொடருந்து, பேருந்து (நெடுந்தூர) மற்றும் விமான பயணிகள் தங்கள் பயணச்சிட்டையை ஆதாரமாக கொண்டு பயணிக்கலாம்.


செல்லப்பிராணிகளுடன் நடை பயணம் மேற்கொள்பவர்களும் அனுமதிக்கப்படுவார்கள். (வீட்டுக்கு அருகே மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்)


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.