கம்பஹாவிற்கு மேலதிகமாக பொது சுகாதார பரிசோதகர்களை அனுப்ப நடவடிக்கை

 கம்பஹா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உதவுவதற்கு ஏனைய மாவட்டங்களிலிருந்து அதிகளவான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த பகுதிக்கு அனுப்பப்படவுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் முயற்சிகளை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

அதன்படி கேகாலை, குருணாகல், புத்தளம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலிருந்து கம்பஹாவிற்கு 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அனுப்பப்படவுள்ளனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.