கொரோனா இன்னும் சமூகப் பரவலை எட்டவில்லை - சுகாதார அமைச்சு

 இலங்கையில் கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலை எட்டவில்லை என சுகாதார அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலைத் தொடர்ந்து, கொரோனா பரவலானது சமூகப் பரவலை எட்டியுள்ளதாக கூறப்படுவது அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கொத்தணி பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர். பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும்.

அதேநேரம் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தோற்றாளர்கள் எவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.Blogger இயக்குவது.