ஜெனீவாவில் கேட்கப்பட்ட தமிழர்களின் இருப்பிற்கான கோரிக்கை!!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இன அழிப்பிலிருந்து தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில் தென்றல் அமைப்பின் சார்பாக உரையாற்றிய இரமேசு கோவிந்தசாமி, தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இன அழிப்பை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார்.
அத்தோடு சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் இதன்போது அவரை வலியுறுத்தினார்.
இங்கிலாந்தும் அதன் உறுப்பு நாடுகளும் தங்களது அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் எவர் என்பதை முழுமையாக மறைத்து ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதியை முழுமையாக மறுக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்
ஐக்கிய நாடுகளது சார்லசு பியேட்றி அறிக்கை இலங்கையில் போர் இடம்பெற்ற இறுதி காலப்பகுதியில் 70,000 ஈழத்தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கு பகுதியில் கொலை செய்யப்பட்டனர் என்று கூறுகிறது.
உறவுகளை இழந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பு வழியாக இன்னும் தங்களது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்கள் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் இரமேசு கோவிந்தசாமி சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை நடத்த கூடாதென நீதிமன்ற கடித்தை கொடுத்து, அமலநாயகியிடம் விசாரணை நடத்தியதுடன் அவரை கடுமையாக மிரட்டி துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 30 ஆம் நாள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தன்று 8 மாவட்டங்களிலிருந்து வந்த பெண்களை இராணுவமும் பொலிஸாரும் தாக்கின என்றும் மட்டக்களப்பில் 200க்கு மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர் என்றும் இரமேசு கோவிந்தசாமி குறிப்பிட்டார்.
மேலும் உண்ணாவிரத போராட்டத்தால் தனது இன்னுயிரை ஈகம் செய்த திலீபன் நினைவை நினைவுகூற கூடாதென நீதிமன்ற ஆணையை அரசியல்வாதிகளுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் 50க்கு மேற்பட்ட மனித உரிமை போராளிகளுக்கும் பொலிஸார் நீதிமன்ற ஆணையினை கொடுத்தது.
எனவே இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இரமேசு கோவிந்தசாமி கோரிக்கை விடுத்தார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை