கந்தானை நபர் ராகமை பொதுச் சந்தையில் மரணம்..!


 நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், ராகமை பொதுச் சந்தை வளாகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு நபர்களுக்கிடையிலான வாய்த்தகராறு நீண்டதில் அதில் ஒருவர் மற்றையவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு, தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர், கந்தானை பிரதேசத்தை சேர்ந்த  23 வயதுடைய இளைஞன்  என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராகமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.