பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்பட காரணம் இதுதான் - எஸ். பி. திசாநாயக்கா!
நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாகவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் போது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்ட உறுதியற்ற தன்மை காரணமாகவே உலகில் எங்கோ ஒரு நாட்டில் மேற்கொள்ளப்படவிருந்த பயங்கரவாத மற்றும் தீவிரவாத தாக்குதல் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதற்கான காரணியாக அமைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியிடம் ஒரு சில அதிகாரங்களும் பிரதமரிடம் ஒரு சில அதிகாரங்களும் காணப்பட்டன.
ஏனைய சில விடயங்கள் ஆணைக்குழுக்கள் வசம் காணப்பட்டன. இருவரும் முரண்பட்ட நிலைமையிலேயே செயற்பட்டனர். இதனாலேயே நாட்டிற்குள் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை