இன்று 20 ,இன் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு!!
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான இன்றைய இரண்டாம் நாள் விவாதத்தைத் தொடர்ந்து குறித்த வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.
இன்று காலை 10 மணி முதல் இரவு 7.30 வரை நாடாளுமன்ற விவாதம் நடைபெறவுள்ள நிலையில், மதிய போசனத்துக்காக விவாதம் இடைநிறுத்தப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று இரவு 7.30 இற்கு விவாதம் முடிவடைந்ததும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பும், குழு நிலை விவாதமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நேற்றைய முதலாம் நாள் விவாதத்தின்போது ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் தமது கருத்துக்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை