ரயில் என்ஜினில் சிக்கி 1300 கிலோ மீட்டர் தூரம் வந்த தலை!

 


மத்திய பிரதேச மாநிலம் பேதுலை சேர்ந்தவர் ரவி மார்க்ரம்(வயது 28). இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக ரவி தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 2-ந் தேதி பேதுல் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்திற்கு வந்த ரவி, அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்தார்.

இதனால் அவர் மீது ரெயில் மோதி விட்டு சென்றது. ரவியின் உடல் பாகங்கள் தண்டவாளத்தின் அருகே சிதறி கிடந்தன.

இதுபற்றி அறிந்த பேதுல் போலீசார் ரவியின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் ரவியின் தலை மட்டும் கிடைக்கவில்லை. அவரது தலையை பேதுலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் போலீசார் தேடிப்பார்த்தனர்.
ஆனால் தலை கிடைக்கவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானி ரெயில் என்ஜினில் ஒரு தலை சிக்கி இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரெயில்வே ஊழியர்கள், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் உயர் அதிகாரிகள் வந்து என்ஜினில் சிக்கி இருந்த தலையை பார்த்தனர்.

பின்னர் ரெயில்வே போலீசார் என்ஜினில் சிக்கி இருந்த தலையை மீட்டனர். இதற்கிடையே ராஜஸ்தான் போலீசார்,

ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்தும், அவர் தலை கிடைக்காதது குறித்தும் அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து ரெயில் என்ஜினில் இருந்து மீட்கப்பட்ட தலையை புகைப்படம் எடுத்து, மத்திய பிரதேச போலீசாருக்கு, பெங்களூரு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்தனர்.

அந்த புகைப்படத்தை ரவியின் குடும்பத்தினரிடம், மத்திய பிரதேச போலீசார் காட்டினர். அப்போது அது ரவியின் தலை என்பது தெரிந்தது.

இதையடுத்து ரவியின் தலையை பெங்களூரு வந்து பெற்று செல்லும்படி அவரது குடும்பத்தினரிடம், பெங்களூரு ரெயில்வே போலீசார் கூறினர்.

ஆனால் அவர்கள் பொருளாதார சூழ்நிலையை காரணம் காட்டி தாங்களால் பெங்களூருவுக்கு வர முடியாது என்று கூறினர்.

இதையடுத்து ரவியின் தலையை எடுத்து சென்று மயானத்தில், ரெயில்வே போலீசார் புதைத்தனர்.

ரவி, ரெயில் முன்பு பாய்ந்த பேதுலில் இருந்து பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திற்கு வர 1,300 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.

இதனால் ரவியின் தலை என்ஜினில் சிக்கி 1,300 கிலோ மீட்டர் தூரம் பெங்களூருவுக்கு வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.