காபூலில் தற்கொலை குண்டுவெடிப்பில் 24 பேர் உயிரிழப்பு!!

 


ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் நேற்று சனிக்கிழமை மாணவர்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் 15 முதல் 26 வயதுக்குட்பட்ட மாணவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு இந்த தாக்குதலில் 57 பேர் காயமடைந்ததாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.


குறித்த தாக்குதலுக்கான பொறுப்பினை தலிபான்கள் மறுத்துள்ளதாக தலிபான்களின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.


இதேவேளை இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.