விக்ரமின் 'கோப்ரா' அடுத்தகட்ட பணி ஆரம்பம்!!
சீயான் விக்ரம் நடிப்பில், ’டிமாண்டி காலனி, ‘இமைக்கா நொடிகள்’ இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோப்ரா’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
12 வித்தியாசமான வேடங்களின் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது. இந்த படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தை அடுத்து, விக்ரம், ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை