கொரோனா சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலயில் ஏனைய சிகிச்சைகள் இரத்து!


 மினுவங்கொட தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட 82 தொற்றாளர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று காலை வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


இதேவேளை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக பிரதேச மக்களின் வழமையான சிகிச்சைகளுக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை நேற்று மாலையிலிருந்து பூட்டப்பட்டுள்ளது.


இந்நிலையில், வழமையாக வைத்திய சேவைகளை நாடும் பிரதேச மக்கள் அருகிலுள்ள ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையை அல்லது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை அணுக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.


தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் விசேட கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் பெண்கள் எனவும் அவர்கள் கம்பஹா மாவட்டத்திலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.