கார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்த சூடான அப்டேட்!

 


கார்த்தி நடித்து வந்த’சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் குறித்த பல்வேறு வதந்திகள் எழுந்தன. இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தின் கதையை நாங்க கேட்ட நாள் முதல் இன்று வரை எங்களை ஆச்சரியப்படுத்தி கொண்டும், தொடர்ந்து எங்களை உற்சாகப்படுத்தியும் வந்தது. இதுவரை எங்களது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்று இந்த படம். இந்த படத்தை நல்லபடியாக முடிக்க உதவிய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி என கார்த்தி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ‘சுல்தான்’ படத்தின் எடிட்டிங் பணிகள் 90% முடிந்துவிட்டது என்றும், தங்கள் நிறுவனம் தயாரித்துள்ள மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களில் இதுவும் ஒன்று எனவும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.