துடிப்பு - கவிதை!!
நான் உனக்காகத்தான்
துடிக்கிறேனென்று
உயிர்
ஒரு நாளும்
சொல்வதில்லை
ஒரு உண்மையான நேசமும் அவ்வாறுதான்
சொல்லாதே துடிக்கும் ..
துடிப்பென்பது உணர்வின்
வெளிப்பாடு
உனக்காக துடிக்காத
ஆன்மாவை
என்ன விலை கொடுத்து
வாங்கி
என்ன பயன் ??
ஒரு நேசம் யாருக்காக
துடிக்கும் ??
ஒரு நேசம் எதை
எதிர்பார்த்து துடிக்கும் ??
உடன் இருந்தாலும்
பிரிந்தாலும்
உயிர் நேசமென்பது
நகர்ந்த பொழுதிலும்
நகரும் பொழுதிலும்
நம்பிக்கை துரோகமிழைக்காத
அந்த நொடிகளில் வாழ்ந்த
உறவொன்றிக்காக
துடிக்கும் ..
தான் யாருக்காக
துடிப்பேன்
தான் யாருக்காக
துடிக்கமாட்டேன் என்று வெளிப்படையாக சொல்ல
முடியாத மாயை
அன்பு ..
உடலின் ஒவ்வொரு
செல்லிலும்
இதயம் இருக்கும் போல ?!!
உணர்வின் துடிப்பு
அப்படியாகத்தான்
உடல் முழுவதும்
துடிக்கும் ..
அன்பின்
மகிழ்விலும்
இரணத்திலும்
அவஸ்தை மொழி
துடிப்பு ...
~விசித்திரன்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை