புதிய அறிவிப்பை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 5 வருடங்கள் நிறைவடைகிறது. இந்த ஐந்து வருட நிறைவு நாளை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதுதான் தனது தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்
இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ‘நானும் ரவுடிதான்’ வெளி வந்து இன்றுடன் 5 வருடங்கள் முடிவடைந்து இருக்கின்றது. அளவில்லா அன்பு மற்றும் பேதரவால் ’நானும் ரவுடிதான்’ பல இதயங்களை வென்றெடுத்து உள்ளது. எங்கள் வாழ்வை மாற்றியது
ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது இதே நாளில் எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராக உள்ளது. என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப்படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம். ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. நெற்றிக்கண் பஸ்ட் லுக் போஸ்டர் நாளை முதல்’ என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்
நானும் ரவுடிதான் திரைப்படம் மட்டுமன்றி விக்னேஷ்-நயன் காதலும் ஐந்தாவது வருடத்தை கொண்டாடி வருகிறது என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை