ஏக்கம் - கவிதை!!

 


ஆறாத வார்த்தையெல்லாம்

ஆழி விழியால்,

நோகாமல் நீயும் 

சொல்லித் தான் போகிறாய்...

தோதான 

உனது வார்த்தைகளை 

என் உள்ளக் கடலில் 

தோணியாய் நீயும் 

தொலைத்து விட்டு !

கடலினை தொலைத்த 

படகே ...

உன் பார்வையால் 

கண்டெடுத்து விடு....

இமைகளால் 

தொலைத்து விட்ட 

கதிரினை

உன் சுட்டு விழி கொண்டு 

சூரியனாய் 

மீட்டெடுத்து கொடு !

நீ இமைகள் 

திறக்க வேண்டி தான்...

விடியலுக்காய் 

காத்திருக்கும் ...

என் பட்டாம் பூசிகள்

உள்ளம் விசும்ப ஏங்குதடி!

கதிரே 

உன் பார்வை பட்டு 

வெளிசத்தில் 

இதழ்கள் விரித்து 

பூப்பதற்காக ஏங்குதடி ...

என் உயிர் மொட்டுக்கள்! - மன்சூர் கவி கான்Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.