வெஜிடபிள் ஃபைத்தா!
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில் பசியெடுக்கும்போது எதையாவது தின்று பசியைப் போக்கிக்கொள்பவர்கள் பலர். அவர்களுக்கு இந்த வெஜிடபிள் ஃபைத்தா உதவும். பசியைப் போக்கும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எப்படிச் செய்வது?
இரண்டு பெரிய வெங்காயத்தை இதழ் இதழாகப் பிரித்து நீளமான, அகலமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். குடமிளகாய் ஒன்றின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டு நீளமான, அகலமான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இரும்பு தோசைக்கல்லில் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் தடவி நன்கு சூடாக்கிக்கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடமிளகாய் துண்டுகளைப் பரப்பி வைக்கவும். அவை வதங்கும்போதே தேவையான அளவு உப்பு மற்றும் டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும் ஒரிகானோவை ஒரு டேபிள்ஸ்பூன் மேலே தூவவும். வெங்காயம் மற்றும் குடமிளகாய் லேசாக நிறம் மாறும்போது இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
சிறப்பு
இது ஒரு கிரில்டு வகை மெக்ஸிகன் உணவு. ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய சைடிஷ். இதை சாதத்துடன் அல்லது பிரெட், சப்பாத்தியின் நடுவில் வைத்து ரோல் போன்று செய்தும் பரிமாறலாம்.
கருத்துகள் இல்லை