பிரான்சில் அதிகபட்ச கொரோனா தொற்று நேற்று பதிவானது!!
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்தது முதல் இதுவரையான காலப்பகுதியில் பிரான்சில் அதிகபட்ச தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அங்கு 60 ஆயிரத்து 486 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரான்சில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1.7 மில்லியனாக மாறியுள்ளதாக ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று ஒரே நாளில் 828 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த எண்ணிக்கையுடன் சேர்த்து கொரோனா தொற்றுக்கு இலக்காகி பிரான்சில் மரணித்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 40 ஆயிரமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரான்சில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கம் முதல் வாரத்தில் உள்ளது.
குறித்த ஊரடங்கின் போது வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாதவர்கள் வேலைகளுக்கு செல்லவும் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த ஊரடங்கினை எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிவரை நீடிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை