குடும்பத்தினருடன் தனிமைப்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர்!


 முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது குடும்பத்தினருடன் பொத்துவில் அருகம்பைக்கு இடையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இவர்கள் மாகாணத்தில் இருந்து வெளியில் சென்ற காரணத்தினால் அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இவர்கள் அருகம்பை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது கொழும்பு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது மனைவி இரண்டு புதல்வர்கள் மற்றும் மருமகள்களுடன் அருகம்பைக்கு சுற்றுலா சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.