காட்டுக்குள் சென்ற பொலிசாரை நோக்கி துப்பாக்கி பிரயோகம்!!

 


காட்டுக்குள் நடந்த பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த சம்பவம் நேற்றிரவு 8.10 மணியளவில் கதிர்காமம் – கட்டகமுவ பகுதிக்கு அருகில் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற்றுள்ளதாக மேலும் அறியமுடிகிறது.


குறித்த காட்டுகப்பகுதியில் இறைச்சிக்காக விலங்குகள் வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் அங்கு சென்ற வன ஜீவராசி அதிகாரிகளை நோக்கி வேட்டைக்காரர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


மேலும் அவர்களினதால் வேட்டையடப்பட்ட இரு மான்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.