நாடாளுமன்றத்தின் பணியாளர் ஒருவர் மரணம்!
இலங்கை நாடாளுமன்றத்தின் சமையலறை பணியாளர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பணிப்புரிந்து கொண்டிருந்த குறித்த நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக அவர் இறக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளதுடன், திடீர் மாரடைப்பால் அவர் இறந்துள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் பின்னர் நேற்றையதினம் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை